(எம்.மனோசித்ரா)

எரிபொருள் விலைக்கான செலவினங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விலை சூத்திரத்தை ஒரு முறையான ஒழுங்கு முறைக்கமைய நடைமுறைப்படுத்துவதற்கு குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

எரிபொருள் விலைக்கான செலவினங்களை அடிப்படையாகக்கொண்டு விலைச்சூத்திரம் ஒன்று அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதனை 2018 மே மாதம் 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்காக, 2 மாத காலப்பகுதியில் சர்வதேச விலையை அடிப்படையாகக்கொண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதியிலிருந்து எரிபொருள் விலைச்சூத்திரத்தை மேற்கொள்ளுவதற்கு அமைச்சரவையினால் முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அதன்படி இந்த விலை சூத்திர முறையை சிறப்பாக ஒழுங்கு முறைக்கமைய நடைமுறைப்படுத்துவதற்காக திறைசேரி மற்றும் கனியவள அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகளைக்கொண்ட உத்தியோகபூர்வ குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.