(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான வலியுறுத்தல்களை தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பிரதி தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கான வலியுறுத்தல்களை தொடர்ச்சியாக நாம் மேற்கொள்ளவுள்ளோம். 

அத்துடன் எதிர்வரும் திங்கட்கிழமை தொழிலாளர் ஆணைக்குழுவுடன் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் பிரதிநிகள் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர். இக் கலந்துரையாடலில் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பிலும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் சார்பில் வலியுறுத்துவோம் என்றார்.