பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளதுடன் பண மோசடியில் ஈடுபட்ட போலி வைத்திய அதிகாரியொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வைத்திய அதிகாரியென தம்மை அடையாளப்படுத்தி பல இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபரொருவவையே கொழும்பு புறக்கோட்டையில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொழும்பு புறக்கோட்டையிலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பமுனுகம, கந்தானை , கொழும்பு மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் சுமார் 50 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.

வைத்தியராக பணியாற்றுவதாகக் கூறி பல பெண்களை ஏமாற்றி இவர் திருமணம் செய்துள்ளதாகவும் தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பனுகம பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த சந்தேகநபர் இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.