கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றெடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் பலதார திருமணங்களுக்கு தடைவுள்ளது. ஆனால் இதை மீறி பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. 

வின்ஸ்டென்ட் பிளாக்மோர் என்ற 61 வயதான நபரே 24 பெண்களை திருமணம் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. 

குறித்த நபர் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் ஆலய மத தலைவராவார்.

குறித்த நபர்  இளம் வயதில் இருந்தே திருமணம் செய்துகொள்ள தொடங்கி சமீபகாலம் வரை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார். 

குறித்த நபர் திருமணம் செய்தவர்களில் பலர் 15 வயதுடைய சிறுமிகள்.

24 மனைவிகள் மூலம் அவருக்கு 149 குழந்தைகள் உள்ளனர். பலதார திருமணம் தொடர்பாக அவர் மீது பிரிட்டிஸ் கொலம்பியா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அவரை 6 மாதத்திற்கு வீட்டு காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வழக்கு விசாரணை நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.