மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜிம்ரோன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் துரத்திச் சென்றபோது அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

நேற்று இரவு 8 மணியளவில் ஜிம்ரோன் நகர் கிராமத்திற்கான உள்ளக வீதியில் குறித்த குடும்பஸ்தர் தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது போக்குவரத்து பொலிஸார் குடும்பஸ்தரை நிறுத்துமாறு வழிமறித்துள்ளனர்.

எனினும் போக்குவரத்து பொலிஸாரது ஆணையை மீறி குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாது வேகமாக பயணித்துள்ளார். இந் நிலையில் பொலிஸார் அவரை பின் தொடர்ந்து துரத்திச் செல்லும் போது அவர் வீதியோரத்தல் காணப்பட்ட மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.  

இவ்வாறு விபத்துக்கானவர் இரு பிள்ளைகளின் தந்தையான இராசமாணிக்கம் இராஜேந்திரன் (வயது 54) என்பவராவார். 

மேலும் இவர் படுகாயங்களடைந்த  நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.