சினிமா வழியே முற்போக்கு கருத்துகளை மக்களிடம் விதைத்த நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை படமாக இயக்க இருப்பதாக அவரது பேரனும், இயக்குநருமான ஐக் அறிவித்திருக்கிறார். 

நடிப்பு மட்டுமின்றி அரசியல், சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இவரது நடிப்புத் திறமையை பார்த்து வியந்த பெரியார், அவரை `நடிகவேள்' என்று அழைத்தார். நாடகத்துறையில் இருந்து சினிமாவில் நுழைந்து வில்லன், நகைச்சுவை, நாயகன் என பல்வேறு கதாபாத்திரங்களில் கலக்கிய எம்.ஆர்.ராதாவின் வாழ்க்கை படமாக உருவாக இருக்கிறது. 

கடந்த ஆண்டு ஜீவாவை வைத்து `சங்கிலி புங்கிலி கதவ தொற' என்ற படத்தை இயக்கிய எம்.ஆர்.ராதாவின் பேரன் ஐக், தனது அடுத்த படமாக எம்.ஆர்.ராதா வாழ்க்கை படத்தை இயக்கப்போவதாக அறிவித்துள்ளார்.