சிரியாவில் கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகள் மீது சிரிய அரசபடையினர் மேற்கொண்ட விமானதாக்குதல்களில் மூன்று  மருத்துவமனைகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

சிரியாவின் டெராவில் உள்ள மூன்று நகரங்களில் இடம்பெற்ற விமானதாக்குதல்கள் காரணமாக மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளன என மனிதஉரிமை மற்றும் மருத்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

சைடா நகரில் உள்ள மருத்துவமனை மீது நள்ளிரவில் இடம்பெற்ற விமானதாக்குதலை தொடர்ந்து அந்த மருத்துவமனை செயலிழந்துள்ளது.

இதேவேளை முசாய்பிரா நகரின் மீது ரஸ்ய விமானங்கள் மேற்கொண்ட தாக்குதலில் அந்த நகரின் முக்கிய மருத்துவமனை சேதமடைந்துள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமை அமைப்புகள் ஜிசா என்ற நகரில் உள்ள மருத்துவமனையும் ரஸ்ய தாக்குதலில் சேதமடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

சிரியாவின் உள்நாட்டுபோரில் மருத்துவமனைகள் மீது பல தாக்குதல்கள்  இடம்பெற்றுள்ள போதிலும் ரஸ்யாவும் சிரியாவும் அதனை நிராகரித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.