பிரித்­தா­னி­யாவை விடவும் 4  மடங்கு பெரி­தான விண்­கல்­லொன்று பூமிக்கு அண்­மையில் கடந்து செல்­ல­வுள்­ள­தா­கவும்  அதனை இரவு நேரத்தில் வெற்றுக்  கண்­களால் அவ­தா­னிக்க முடியும் எனவும்  விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

'4  வெஸ்ட்ரா'  அல்­லது ' வெஸ்ட்ரா'  என அழைக்­கப்­படும் இந்த இள மஞ்சள் நிற ஒளியுடன் காணப்­படும் விண்­கல்லை அது பூமி­யி­லி­ருந்து 106  மில்­லியன் மைல் தொலைவில் பய­ணிக்­கை­யி­லேயே  வானில் அவ­தா­னிக்க முடி­வது  குறிப்­பி­டத்­தக்­கது.

இந்த விண்­கல்லை பூமியின்  வட மற்றும் தென் அரைக்கோளங்கள் இரண்­டி­லு­மி­ருந்­துமே அவ­தா­னிக்கக் கூடி­ய­தாக இருப்­பது சிறப்­பம்­ச­மாகும்.

அத்­துடன் மேற்­படி  விண்­கல்லை  இரவு நேரத்­தில் செவ்வாய்க்கிர­கத்­துக்கும்  சனிக்­கி­ர­கத்­துக்கும் அண்­மையில் தனுசு நட்­சத்­திரத் தொகு­தியில் காணக்­கூ­டி­ய­தாக இருக்கும் என விண்­வெளி நிபு­ணர்கள்  தெரி­விக்­கின்­றனர்.

ஆனால் இந்த 310  சதுர மைல் பரப்பளவான  பிரகாசமான விண்கல் பூமியில் மோதுமா என அஞ்சத் தேவையில்லை எனவும் அது எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதிவரை வானில் தென்படும்  எனவும்  அவர்கள் கூறுகின்றனர்.

இந்த விண்கல்லின் அளவு பிரித்தானியாவை விட மூன்று மடங்கு அதிகம் என்று தெரிவித்துள்ள நாசா, பூமியில் டைனோசர் இனத்தை அழித்த விண்கல்லை விட இது இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த  விண்கல் பூமியில் விழுந்தால், பூமியின் நான்கில் மூன்று பகுதி அழித்துவிடும் என்றும் கூறப்படுகிறது.