ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுடன் சுவிற்சர்லாந்தும் 2018 உலகக் கிண்ண கால்பந்தாட்ட இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டன. இதற்கு அமைய இதுவரை இரண்டாம் சுற்றுக்கு ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்க நாடுகளுமே தகுதிபெற்றுள்ளன.

ஆசியாவினதும் ஆபிரிக்காவினதும் பெருமையை ஜப்பானும் செனகலும் இன்று காப்பாற்றுமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மொஸ்கோ, ஸ்பார்ட்டக் விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற ஈ குழுவுக்கான உலகக் கிண்ண லீக் போட்டியில் சேர்பியாவை 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் பிரேஸில் வெற்றிபெற்றது.

போட்டியின் 36 ஆவது நிமிடத்தில் பிலிப்பே கூட்டின்ஹோ பரிமாறிய பந்தை பௌலின்ஹோ மிகவும் சிரமமான முறையில் கோலாக்கி பிரேஸிலை முன்னிலையில் இட்டார்.

அதன் பின்னர் கோல் நிலையை சமப்படுத்த சேர்பியா கடுமையாக முயற்சித்தது. அனால் பிரேஸிலின் பின்களத்தை ஊடறுத்து செல்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதுடன் அதன் இலக்குகளும் தவறிப்போயின.

போட்டியின் 68 ஆவது நிமிடத்தில் நேமாரின் கோர்ணர் கிக்கை முறையாகப் பயன்படுத்திய தியாகோ சில்வா பந்தை தலையால் முட்டி பிரேஸிலின் இரண்டாவது கோலைப் போட்டார்.

முதல் சுற்று ஈ குழுவில் அணிகளின் இறுதி நிலை

அணி     வி வெ    ச   தோ பெ   கொ நி  பு    

பிரேஸில்      3         2    0      1           5       1 +4   7   

சுவிட்சர்லாந்து      3         1    2      0           5       4 +1   5  

சேர்பியா      3         1    0      2           2       4 -2   3   

கொஸ்டா ரிக்கா     3         0    1      2           2       5 -3   1

(குறிப்பு: வி: விளையாடிய போட்டிகள், வெ: வெற்றி, ச: வெற்றிதோல்வியில்லை, தோ: தோல்வி, பெ: பெற்ற கோல்கள், கொ: கொடுத்த கோல்கள், நி: நிகர கோல்கள், பு: புள்ளிகள்)