பொலன்னறுவை பொசன் தின நிகழ்ச்சிகளுடன் இணைந்ததாக பொலன்னறுவை வரலாற்று முக்கியத்துமிக்க கல்விகாரையில் இடம்பெறும் புனித சின்னங்களை காட்சிப்படுத்தல்.

பொதுமக்கள் தரிசிப்பதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்பட்டது.

கண்டி நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திலிருந்து இந்த புனித சின்னங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

மக்கள் தரிசிப்பதற்காக புனித சின்னங்கள் வைக்கப்பட்டுள்ள விசேட பேழையை பிரதிஷ்டை செய்த ஜனாதிபதி முதலாவது மலர் பூஜையை செய்தார்.

சங்கைக்குரிய கந்தகெடியே அத்ததஸ்ஸி தேரரினால் விசேட சமய கிரியைகள் நடத்தப்பட்டன.

இராணுவத் தளபதி லெப்டினல் மகேஸ் சேனாநாயக்க, பொலன்னறுவை நகர பிதா சானக்க சிதத் ரணசிங்க, பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியத்ன ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.