யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து காரை நகர் செல்லும் வீதியை மறித்து சுழிபுரம் காளுவன் சந்தியில் பொதுமக்கள், பெற்றோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வீதி மறியில் போராட்டமானது இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.