“சு. க.வின் சுயாதீன குழுவினர் அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர்”

Published By: Daya

27 Jun, 2018 | 04:10 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ்)

நாட்டில் கணக்கில் எடுக்காத பிளவடைந்த கட்சியின் தலைவரான விமல் வீரவன்சவை சந்தித்தமையின் ஊடாக சுதந்திரக் கட்சியின் 16 பேர் குழுவின் தரம் வெளிப்பட்டுள்ளது. 

ஆகவே அரசியலில் 16 பேர் கொண்ட குழுவினர் அநாதைகளாக்கப்பட்டுள்ளனர். இவர்களினால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி எழுப்பியது.

சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர் நேற்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க போவதாக சவால் விட்டனர். இது தொடர்பாக கருத்து வினவிய போதே ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் பிரிவின் பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெர்ணான்டோ கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய அரசாங்கத்தை விமர்சித்து வெளியேறிய சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவினர் நிலைமை கவலைகுரியதாக மாறியுள்ளது. அரசியலில் அவர்கள் அநாதரவாக்கப்பட்டுள்ளனர். அரசியலில் எந்த கட்சியின் பக்கம் செல்வது என்பது தெரியாமல் தட்டுதடுமாறுகின்றனர்.

இதன்படி நேற்று பிளவுப்பட்டுள்ள கட்சி தலைவரை சந்தித்துள்ளனர். தனது கட்சி பாதுகாக்க முடியாத விமல் வீரவன்ச சந்தித்து பேசியுள்ளனர். கட்சி தலைவராகவே கணக்கில் எடுக்க முடியாத விமல் வீரவன்ச சந்தித்தமை ஊடாக சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட குழுவின் உண்மை நிலைமை வெளிப்பட்டுள்ளது.

ஆகவே சுதந்திரக் கட்சியின் சுயாதீன குழுவினர் அரசியல் அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். எங்கு செல்வதென்று தெரியாமல் விமல் வீரவன்சவை சென்று சந்தித்துள்ளமை அதனை உறுதிப்படுத்துகின்றது.

அரசியலில் அநாதைகளானவர்களினால் எப்படி ஆட்சியை கவிழ்க்க முடியும். இந்த ஆட்சியை ஐந்து வருடம் முடியும் வரை கவிழ்க்க முடியாது.  

ஆகவே நாம் தொடர்ந்து ஆட்சியை கொண்டு செல்வோம் .

அத்துடன் தற்போது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை துரிதமாக முன்னெடுத்து வருகின்றோம். தற்போது மிகுதமாக உள்ள காலப்பகுதியை குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு பயணிக்க உள்ளோம்.

 ஆகவே எமது வேலைத்திட்டத்திற்கு நாட்டு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். அண்மையில் நாம் கம் பெரலிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். இதன் ஊடாக கிராமத்தில் பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08