(இரோஷா வேலு) 

சட்டவிரோதமான முறையில் டுபாய்க்கு வல்லப்பட்டைகளை கடத்திச் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் நேற்று சர்வதேச பண்டாரநாயக் விமான நிலையத்தில் வைத்து சுங்க பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, 

சட்டவிரோதமான முறையில் டுபாய்க்கு நேற்று வல்லப்பட்டடைகளை கடத்திச் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் சுங்க பிரிவினரால் சர்வதேச பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 1,260,000 ரூபா பெறுமதியான 18.2 கிலோகிராம் வல்லப்பட்டை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இச்சம்பவத்தின் போது இலங்கை பிரஜையான 33 வயதுடைய பெண்ணொருவர் தனது பிரயாண பைகளின் மறைத்து வைத்து இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வல்லப்பட்டைகளை கைப்பற்ற முயற்சிக்கையிலேயே சுங்க பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றார்.