வவுனியா- நொச்சிமோட்டைப் பாலத்திற்கு அருகில் பஸ்ஸில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது பொலிஸாரால் இரு இராணுவ வீரர்கள் கஞ்சாவுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று அதிகாலை வவுனியா - நொச்சிமோட்டை  பாலத்திற்கு அருகில் யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற பஸ்ஸில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது இராணுவ வீரர் பொதியினுள் மறைத்து எடுத்துச் சென்ற இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பஸ்லில் ஹொறவப்பொத்தானையைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரிடம் சந்தேகத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டபோது சிறியளவிலான 6 கஞ்சா பொதிகள் மீட்டுள்ளதாகவும்.

குறித்த இருவரையும் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.