சென்னை மதுரவாயிலில் உள்ளவீடொன்றில் இலங்கைப்பெண்ணொருவரின் கணவரும் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தந்தையும் இரு மகன்மாருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹபீப்ரஹ்மான் என்பவரும் அவரது மகன்களுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பொதுமக்கள் அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து தூ;நாற்றம் வீசியதை தொடர்ந்து வீட்டை உடைத்து திறந்து பார்த்தவேளை அவர்கள் பிணமாக காணப்பட்டனர் என குறிப்பிட்டுள்ளனர்.

மூவரும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அதிகாரிகள் ஹபீப்ரஹ்மான் அவரது மனைவியை பிரிந்துவாழ்ந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர்.

காரைக்குடியை சேர்ந்த ஹபீப்ரஹ்மான் இலங்கையை சேர்ந்த நிசாபாத்திமா என்ற பெண்ணை திருமணம் செய்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஹபீப்ரஹ்மான் உணவகமொன்றில் வேலை பார்த்து வருகின்றார் என குறிப்பிட்டுள்ள  பொலிஸார் அவரது மனைவி இரண்டு வருடங்களிற்கு முன்னர் அவரையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு  இலங்கை சென்றுவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது மனைவியை சமாதானம் செய்ய முயன்றார் எனினும் அது சாத்தியமாகவில்லை கடந்த வாரம் சென்னை வந்திருந்த அவரது மனைவி அவரை பார்க்கவில்லை,இதன் காரணமாக அவர் மனமுடைந்து காணப்பட்டார் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தந்தையையும் மகன்களையும் இறுதியாக பார்த்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்கிமை வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை தொடர்ந்து அயலவர்கள் வீட்டை உடைத்து திறந்தனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.