மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளிற்கு முழு ஆதரவு- இராணுவம்

Published By: Rajeeban

27 Jun, 2018 | 12:48 PM
image

இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழு மேற்கொண்டுள்ள விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகளின் அமைதிப்படையில் இடம்பெறவுள்ள இலங்கை படையினர் குறித்த விசாரணைகளால் எழுந்துள்ள சர்ச்சைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

ஐநா அமைதிப்படையில் இடம்பெறவுள்ள இலங்கை வீரர்கள் குறித்து இலங்கையின் சுயாதீன அமைப்பான இலங்கை மனித உரிமை ஆணையகம் விசாரணை செய்வது குறித்து நாங்கள் திருப்தியடைந்துள்ளோம் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள படையினரின் விபரங்களை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கை படையினரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவது ஏன் தாமதமாகிவருகின்றது என ஐநா  கேள்வி எழுப்பிவருவதாகவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இது குறித்து ஆராய்ந்துள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மனிதஉரிமை ஆணைக்குழு மேற்கொண்டுள்ள விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் எனவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதேவேளை விசாரணைகள் தாமதமாவதால் எழுந்துள்ள பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியும் எனவும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37