(இரோஷா வேலு) 

மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மில்லவான பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட அறுவரை கைதுசெய்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க குறித்த பகுதியில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட பொலிஸார், அவர்களை கைதுசெய்ததனுடன் புதையல் தோண்ட பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் திக்வல்ல, அகுரம்பட, மாத்தளை மற்றும் மாவனெல்ல பகுதிளைச் சேர்ந்தவர்களாவர்.