நைஜீரிய ரசிகர்களின் இதயம் நொறுங்கின ; ஆட்டம்கண்ட ஆர்ஜன்டீனாவை கரைசேர்த்த ரோஜோ

Published By: Digital Desk 4

27 Jun, 2018 | 10:14 AM
image

நைஜீரியாவுக்கு எதிராக செய்ன்ட் பீட்டர்ஸ்பேர்க் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற டி குழுவுக்கான மூன்றாம் கட்ட உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் கடைசி நேரத்தில் மார்க்கோஸ் ரோஜோ போட்ட அலாதியான கோலின் உதவியுடன்  2 க்கு 1 என்ற கோல் அடிப்படையில் ஆர்ஜன்டீனா இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நிலையில் இப் போட்டியை எதிர்கொண்ட ஆர்ஜன்டீனாவின் பின்கள வீரர் ரோஜோ, 86ஆவது நிமிடத்தில் ‘வொலி’ முறையில் போட்ட கோல் நைஜீரியர்களின் இதயங்களை சுக்குநூறாக்கியது.

போட்டியின் 14ஆவது நிமிடத்தில் அணித் தலைவர் லயனல் மெசி மிக இலாவகமாக கோல் போட்டு ஆர்ஜன்டீனாவை முன்னிலையில் இட்டார். இது சர்வதேச அரங்கில் அவர் போட்ட 100ஆவது கோலாகும். அத்துடன் முதலிரண்டு போட்டிகளில் தடுமாற்றத்துடன் விளையாடிய மெசி, இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் போட்ட முதலாவது கோல் இதுவாகும்.

ஆனால், போட்டியின் 51ஆவது நிமிடத்தில் தேவையில்லாமல் நைஜீரியாவுக்கு பெனல்டி ஒன்றை ஆர்ஜன்டீன பின்கள வீரர் ஜேவியர் மாஸ்செரினோ தாரைவார்த்தார். நைஜீரிய வீரர் பெலோகனை கழுத்தில் பிடித்து மாஸ்செரினோ வீழ்த்தியதால் மத்திஸ்தர் அவருக்கு மஞ்சள் அட்டையைக் காட்டி நைஜீரியாவுக்கு பெனால்டியையும் வழங்கினார்.

இந்த பெனால்டியை மிகவும் நிதானத்துடன் கோலாக்கிய விக்டர் மோசஸ், நைஜீரியாவுக்கு இரண்டாம் சுற்றுக்கு செல்வதற்கான நம்பிக்கையைக் கொடுத்தார்.

இரண்டாம் சுற்றுக்கு செல்ல நைஜீரியாவுக்கு வெற்றிதோல்வியற்ற முடிவே தேவைப்பட்டது.

நேரம் செல்ல செல்ல முன்னாள் சம்பியன்களான ஆர்ஜன்டீனாவின் இரண்டாம் சுற்று கனவு கலைந்து போய்விடுமோ என்ற சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.

ஆனால் போட்டியின் 86ஆவது நிமிடத்தில் வலப்புறத்திலிருந்து பரிமாறப்பட்ட பந்தை நைஜீரிய பெனல்டி எல்லைக்குள் இருந்தவாறு மார்க்கஸ் ரோஜோ கோலினுள் புகுத்த, ஆர்ஜன்டீனா உலகக் கிண்ண்தையே வென்றுவிட்டது போன்ற உணர்வு அரங்கில் வெளிப்பட்டது.

நான்கு வருடங்களுக்கு முன்னர் பிரேஸிலில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியிலும் நைஜீரியாவுக்கு எதிராக ரோஜோ வெற்றிக் கோலை போட்டிருந்தார்.

மேலும் டியகோ மரடோனா, கேப்றியல் பட்டிஸ்டூட்டா ஆகியோரைத் தொடர்ந்து மூன்று உலகக் கிண்ண அத்தியாயங்களில் கோல் போட்ட மூனறாவது ஆர்ஜன்டீன வீரரானார் லயனல் மெசி.

(என்.வீ.ஏ.)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35