நாசா விஞ்ஞானிகள் சாதனை

Published By: Daya

27 Jun, 2018 | 09:42 AM
image

விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியை 70 சதவீதம் குறைத்து நாசா விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். 

விமானங்கள் இயக்கப்படும் போது அதிக அளவிலான இரைச்சல் சத்தம் ஏற்படும். பொதுவாக வானில் பறக்கும் விமானத்திலிருந்து வரும் ஒளியை நிலத்தில் இருந்தே கேட்க முடியும். அப்படி இருக்கையில் விமான நிலையத்திற்கு அருகில் வசிப்பவர்கள் இந்த இரைச்சல் சத்தத்தினால் அதிக அளவில் பாதிப்படைகின்றனர். விமானத்தில் செல்லும் பயணிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். 

இந்நிலையில், விமானம் இயக்கப்படும் போது ஏற்படும் இரைச்சல் ஒலியைக் குறைக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) நீண்ட காலமாக ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தது. பல்வேறு சோதனைகளுக்குப் பின் தற்போது அந்த சோதனையில் குறிப்பிடத்தக்க வெற்றியை எட்டியுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

நாசாவின் சோதனை விமானங்களில் நடத்தப்பட்ட பல்வேறு மாற்றங்களுக்குப் பின் அவை இயக்கப்பட்டபோது இரைச்சல் ஒலி 70% குறைந்துள்ளதாகவும், இதற்காக விமான அமைப்பில் மூன்று தொழில்நுட்ப மாற்றங்களைச் செய்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அளவுக்கு விமானத்தின் இரைச்சல் குறைக்கப்படுவது விமான நிலையத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாதபடி உதவும் என தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26