குசால்பெரேரா தில்ருவான் பெரேராவின் துணிச்சலான ஆட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

பிரிஜ்டவுன் டெஸ்டின் நான்காவது நாளான  நேற்று ஏழாவது விக்கெட்டிற்காக 63 ஓட்டங்களை பெற்ற குசால்தில்ருவான் ஜோடி இலங்கை அணி தனது இலக்கை எட்டுவதற்கும் டெஸ்ட் போட்டியை சமன் செய்வதற்கும் உதவியது.

ஜேசன்ஹோல்டர் ஐந்து விக்கெட்களை வீழ்த்திய போதிலும் மேற்கிந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகத்திறமையாக பந்து வீசிய போதிலும் இலங்கை அணியின் இரு வீரர்களும் களத்தில் உறுதியாக நின்று அணியை கரைசேர்த்தனர்.

நேற்றைய ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே குசல்மென்டிஸ் ஆட்டமிழந்தது இலங்கை அணியை மேலும் நெருக்கடியான நிலையில் தள்ளியது.

எனினும் முதல்நாள் இடம்பெற்ற எதிர்பாராத விபத்தில் சிக்கிய குசால்பெரேரா மருத்துவமனையிலிருந்து திரும்பி 43 பந்துகளில் 28 ஓட்டங்களை பெற்றார்.தில்ருவான் பெரோ 68 பந்துகளில் 23 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்காமலிருந்தார்.

எனினும் இருவரும் அதிஸ்டங்களையும் காயங்களையும் எதிர்கொண்டனர், தில்ருவான் பெரேரா அடித்த பந்துகள் பல தடவை ஸ்லிப் ஊடாக சென்றமை குறிப்பிடத்தக்கது. கெமர்ரோச்சின் போல்ட் ஆகும் ஆபத்தையும் அவர் எதிர்கொண்டார்.

கமின்சின் பந்து ஒரு முறை குசால்பெரேராவின் கையை பதம் பார்த்தது.

எனினும் குசால்பெரேரா  துணிச்சலுடன் களத்தில் நின்று  அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.