அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சொச்சி, பிஷ்ட்  விளையாட்டரங்கில் நடைபெற்ற சி குழுவுக்கான மற்றொரு போட்டியில் 2 க்கு 0 என்ற கோல்கள் அடிப்படையில் பெரு ஆறுதல் வெற்றியை ஈட்டியது.

டென்மார்க் தோல்வி அடையும் அதேவேளை அதிகப்படியான  கோல் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் இரண்டாம் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய அவுஸ்திரேலியாவுக்கு, போட்டியின் 18ஆவது நிமிடத்தில் ஏமாற்றம் காத்திருந்தது. அவுஸ்திரேலிய இடது புற எல்லையிலிருந்து பெரு அணித் தலைவர் பாவலோ குரேரோ பரிமாறிய பந்தை வலது காலால் மிகப் பலமாக உதைத்த அண்ட்ரே கெரில்லோ தனது அணியின் முதலாவது கொலைப் போட்டார்.

இடைவேளை முடிந்து ஆட்டம் தொடர்ந்த 5ஆவது நிமிடத்தில் (50 நி.) க்றிஸ்டியன் சேவா பரிமாறிய பந்தை பெரு அணித் தலைவர் பாவலே குரேரோ கோலாக்கினார். அத்துடன் அவுஸ்திரேலியாவின் எதிர்பார்ப்பு தவிடுபொடியானது. 

அதனைத் தொடர்ந்து போட்டியில் எதிர்பார்த்த சுவாரஸ்யம் காணப்படவில்லை. அத்துடன் பெரு தடுத்தாடும் உத்தியைக் கையாண்டு தனது வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டது. 

(என்.வீ.ஏ.)