டிரம்ப் முஸ்லிம் நாடுகளுக்கு விதித்த பயணத்தடைக்கு நீதிமன்றம் ஆதரவு

Published By: Digital Desk 4

26 Jun, 2018 | 10:46 PM
image

முஸ்லிம் நாடுகளின் பிரஜைகள் அமெரிக்காவிற்கு செல்வதை தடுக்கும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரெம்ப் கொண்டு வந்த தீர்மானத்திற்கு அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. 

சிரியா, ஈரான் உள்ளிட்ட 5 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய ட்ரம்ப் தடை விதித்த உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை என அதிரடியாக அறிவித்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்த பயணத்தடை உலகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி விமர்சிக்கப்பட்ட நிலையில், வணிகம், கல்வி போன்ற பணிகளுக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களை அனுமதிக்கலாம் என்றும் அமெரிக்காவில் இருக்கும் மேற்கண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களின் மிக நெருக்கமான உறவினர்களை அனுமதிக்கலாம் என்றும் பின்னர் பயணத்தடையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது.

வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகள் இப்பட்டியலில் பின்னர் இணைக்கப்பட்டன. டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவின் பல மாகாண நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, இந்த பயணத்தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டது.

பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான், ஈராக் ஆகிய நாடுகள் விலக்கப்பட்டன. இந்நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மட்டும் போதும் என அறிவிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து அந்நாட்டு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த தடையை விலக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 9 நீதிபதிகள் கொண்ட அமர்வில் 2 நீதிபதிகள் மட்டுமே அதிபரின் உத்தரவை தடை செய்ய அனுமதிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கினர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல அமைப்புகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், ட்ரம்ப்பின் பயணத்தடை சரியே என இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி கொண்ட 5 நீதிபதிகள் அமர்வில், நான்கு நீதிபதிகள் டிரம்ப் அறிவிப்புக்கு சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17