(இரோஷா வேலு) 

ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களை நடத்துவதில் சிறிய தாமதம் காணப்படுவது ஒவ்வொரு தேர்தலின் போதும் வெளிப்படும் ஒன்றே. இது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்திலிருந்து தொடர்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாகாண சபைகள் தேர்தல்களை நடத்துவது தொடர்பில் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளனர்.  கூடிய விரைவில் தேர்தல்கள் பழைய முறையிலோ அல்லது புதிய முறைமையிலோ வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் விரைவில் இடம்பெறும்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களை நடத்துவதில் சிறிய தாமதம் காணப்படுவது ஒவ்வொரு தேர்தலின் போதும் வெளிப்படும் ஒன்றே. இது முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன காலமிருந்து தொடர்கிறது என்றார்.