5 பெண்கள் உட்பட 6 பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் கைது;10 தங்க சங்கிலிகள் மீட்பு 

Published By: Digital Desk 4

26 Jun, 2018 | 05:18 PM
image

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய குமபாவிஷேக நிகழ்வின் பொழுது பக்தர்களின் தங்க ஆபரணங்களை திருடிய 5 பெண்கள் உட்பட 6 பேர்கொண்ட கொள்ளைக்கும்பலை 10 தங்க சங்கிலிகளுடன் கைது செய்துள்ளனர்.

அம்பாறை திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய குடமுழுக்கு கும்பாவிஷேசம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது பக்தர்களின் தங்க ஆபரணங்களை திருடிய 5 பெண்கள் உட்பட 6 பேர்கொண்ட கொள்ளையர் குழுவை இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து 10 தங்கச் சங்கிலிகள் மற்றும்  28 இலச்சம் ரூபாவுக்கு  வங்கிகளில் தங்க ஆபரணங்களை  ஈடுவைத்த பற்றுச் சீட்டுகளையும் மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர் 

ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் குடமுழுக்கு கும்பாவிஷேசம் நேற்று இடம்பெற்றது 

இதன்போது பெண்கள் அணிந்திருந்த தங்க ஆபாரணங்கள் திருட்டுப்போயுள்ளது இதனையடுத்து பொலிஸ் நிலையததில் முறைப்பாடு செய்யப்பட்டது.

பிற மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் சிலர் சந்தேகத்துக்கிடமாக அங்கு திரிவதாக கிடைத்த தகவலையடுத்து கம்பளை ,நுவரெலியா, குருநாகலைச்  சேர்ந்த  5 பெண்கள் உட்பட  6 பேரரை கைது செய்தனர் 

இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 10 தங்கச் சங்கிலிகள் மற்றும் கடந்த 2 மாதத்திற்குள் 28 இலச்சம் ரூபாய்க்கு நீர்கொழும்பு நிட்டம்புவ பிரதேசங்களில் உள்ள வங்கிகளில் தங்க ஆபரணங்களை ஈடுவைத்துள்ள பற்றுச் சீட்டுக்களையும் மீட்டுள்ளனர் 

இந்த கொள்ளையர்குழு ஆலங்களில் இடம்பெறும் திருவிழாக்களில் அவர்களும் பக்தர்கள் போல நடித்து கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் அவர்களிடம் இருந்து சூட்சமமான முறையல் தங்க ஆபரணங்களை திருடியதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்போது இவர்களை 14 நாட்கள் விளக்மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55