(லியோ நிரோஷ தர்ஷன்)

அமெரிக்கா தலைமையில் ஹவாய் தீவு பகுதிகளில் இடம்பெறும் முக்கிய நாடுகளின் கூட்டு பயிற்சிக்கு இலங்கைக்கு முதற் தடவையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் அமெரிக்காவின் கடற்படைக் கூட்டுப் பயிற்சியில் முதல்முறையாக இலங்கை பங்குப்பற்ற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த கூட்டு பயிற்சி  இடம்பெறுகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரிய இந்த கூட்டுப் பயிற்சியை  அமெரிக்கா ஒழுங்கு செய்து வருகின்றது. 

இப் பயிற்சியில் இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் கனடா உள்ளிட்ட 20 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. ஜுன் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கும் இந்த கூட்டு பயிற்சி தொடர்ந்தும் இரண்டு நாட்களுக்கு இடம்பெற உள்ளன.