உழுந்து இறக்குமதியை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உழுந்துக்காக இதுவரையில் இருந்துவந்த 100 ரூபா இறக்குமதி வரி 150 ரூபாவாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக உள்ளுர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திக்கு ஆகக்கூடிய விலையை பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்வதே இதன் நோக்கம் என்பதோடு, இதேபோன்று தற்பொழுது உற்பத்தியாளர்கள் வைத்திருக்கும் உழுந்திற்கு ஆகக்கூடிய விலையை பெற்றுக்கொள்ள இதன் மூலம் முடியும்.

இதேபோன்று எதிர்வரும் போகத்தில் உழுந்து உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் இதன்மூலம் முடியும் என சிரேஷ்ட ஆய்வாளர் துமிந்த பிரியதர்ஷன தெரிவித்தார்.