(எம்.மனோசித்ரா)

லுணுகம்வெஹர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெவிரமிவெஹர பிரதேசத்தில் 5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேச பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைதான சந்தேகநபர்கள் 30 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும், அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் குறித்த சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டவுள்ளனர். லுணுகம்வெஹர பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.