கண்டி மா நகரில் இன்று பகல் பெரிய அரச மரமொன்று பாதையில் வீழ்ந்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் அறுவர் படு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் கெப்ரக வாகனம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கண்டி எஹலபொல குமாரிஹாமி மாவத்தைக்கும் அழுத்தக தம்மாநந்த மாவத்தைக்கும் இடைப்பட்ட பகுதியில் போகம்பறை சிறைச்சாலைக்குப் பின் பக்கமாக இந்த விபத்து நடந்துள்ளது.

போகம்பறை மைதானத்தில் இடம்பெற்றுக் கொண்டிருந்த விளையாட்டுப் போட்டியை பார்க்கச் சென்ற சிலரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(வத்துகாமம் நிருபர்)