சிரிய தலைநகரான டமாஸ்கஸின் விமான நிலையமருகே இன்று அதிகாலை இஸ்ரேல் விமானப்படைகள் இரு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளன.

இஸ்ரேல் நாட்டின் கோலன் ஹெயிட்ஸ் பகுதியில் உள்ள டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் அருகே இன்று அதிகாலை இஸ்ரேல் நாட்டின் விமானப்படைகள் இரு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதாக சிரியாவிற்கான மனிதவுரிமைகள் அமைப்பு  தெரிவித்துள்ளது.

சிரியா அரசுக்கு ஆதரவான படைகளின் ஆயுத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் உயிர்பலி ஏதுமில்லை என்று முதல்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..