போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதையற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம் என்னும் தொனிப் பொருளில் வவுனியா நொச்சிமோட்டை கனிஸ்ட உயர்தர வித்தியாலய மாணவர்கள், ஆசிரியா்கள் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இன்று காலை பாடசாலை முன்பாக ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் ' புகைத்தலை ஒழித்து புதுயுகம் படைப்போம், போதை அது சாவின் பாதை, மேதையை அழிக்கும் போதை, போதையை தொடராது சாதனை படைப்போம்' என எழுதப்பட்ட பல்வேறு சுலோக அட்டைகளையும் இதன்போது ஏந்தியிருந்தனர். இதன்போது சுமார் ஒரு மணிநேரம் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.