இலங்கை கிரிக்கெட் வீரா் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் கைத்தொலைபேசி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் வீரா் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினருமான  ரஞ்சன் டி சில்வா அவரது வீட்டுக்கு அருகில் வைத்து கடந்த மே மாதம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொலைசெய்யப்பட்டார்.

கொலையுடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.  

இந்நிலையிலேயே தற்போது அக்கொலையுடன் தொடர்புடைய கையடக்கத்தொலைபேசி ஒன்றினை இரத்மலானை பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் இருந்து கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.