ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் பிரதானி மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னால் தலைவர் ஆகியோரின் பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.

540 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கோரியிருந்த நிலையில் அது பின்னர் 100 மில்லியனாக குறைக்கப்பட்டு பின்னர் 20 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டின் பேரில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னால் பிரதானி மஹாநாம மற்றும் அரச மரக் கூட்டுத்தாபனத்தின் முன்னால் தலைவர் திஸாநாயக்க ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த இருவரின் பிணை மனுவை கொழும்பு பிரதான நீதிவான் நீதி மன்றம் நிராகரித்ததுடன் எதிர்வரும் ஜூலை மாதம் 10 திகதி வரை விளக்கமறியலை நீடித்து உத்தரவிட்டுள்ளது.