வவுனியாவில் மரக்கடத்தல் ஒன்று ஒமந்தை பொலிஸாரினால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

ஒமந்தை பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து ஓமந்தையிலிருந்து வவுனியாவிற்கு பெறுமதி வாய்ந்த முதிரை மரக்குற்றிகளை கடத்தி வந்த ஹன்ரர் ரக வாகனத்தை ஒமந்தை பொலிஸார் துரத்திச் சென்ற போது கொக்குவெளி பகுதியில் வாகனம் தடம் புரண்டுள்ளது.

இதனையடுத்து, மரக்கடத்தலில் ஈடுபட்டவர்கள் வாகனத்தை கைவிட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.