மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் மட்டக்களப்பு, காத்தான் குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதி சொகுசு பஸ் வண்டியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு  வந்த வேன் ஒன்றும் நேற்று இரவு 11 மணியளவில் கிரான், இலங்கை வங்கி (BOC) கிளைக்கு முன்பாக விபத்துக்குள்ளாளனது.

இந்த விபத்தில் வேனின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். 

இந் நிலையில் இவர்களுள் கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த பிரகாஷ் கெல்வின் எனும் சிறுவனே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டு.வில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி; நான்கு பேர் படுகாயம்