குப்பை பிரச்சினை ஜனாதிபதியின் கவனத்திற்கு

Published By: Daya

26 Jun, 2018 | 11:07 AM
image

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொலன்னறுவை நகரத்திற்கு அழகு சேர்க்கும் பராக்கிரம சமுத்திரத்தின் அணைக்கட்டை அண்டிய பிரதேசத்தில் நீண்ட காலமாக இருந்துவரும் குப்பை பிரச்சினை  அதன் வனப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இப்பிரதேசத்தில் முறையற்ற வகையில் குப்பைகள் கொட்டப்படுவதன் காரணமாக குப்பைகள் தேங்கிக் கிடப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. 

நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களில் பங்குபற்றுவதற்காக அங்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது பராக்கிரம சமுத்திரத்தை அண்டிய பகுதியில் இந்த கவலைக்கிடமான நிலையினை அவதானித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து உடனடியாக அவ்விடத்திற்கு உரிய அதிகாரிகளை அழைத்த ஜனாதிபதி இந்த குப்பை பிரச்சினையை தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கையை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். குறித்த பிரதேசத்தில் உரிய முறையில் குப்பைத் தொட்டிகளை பொருத்துமாறும் முறையற்ற வகையில் குப்பைகளை வீசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். 

குறித்த நடவடிக்கை குறித்து தான் தொடர்ச்சியாக தொடராய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

வரலாற்று முக்கியத்துவமிக்க பராக்கிரம சமுத்திரத்தை பாதுகாத்து மக்கள் சுதந்திரமாகவும் ஆரோக்கியமான சூழலிலும் அதன் அழகினை கண்டு களிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக் காட்டினார். 

பொசொன் மாதத்தையொட்டி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வரலாற்று முக்கியத்துவமிக்க பொலன்னறுவை நகருக்கு வரும் மக்களுக்கு சௌகரியமான விதத்தில்  அதன் சூழலை பேணி அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54