ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் தற்கொலைப்படை அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள குணார் மாகாணத்தில் அமைந்துள்ள பொலிஸ் நிலைய சோதனை சாவடிக்கு வெளியே தற்கொலைப்படை அமைப்பினர் குறித்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டதோடு குறித்த தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் பலியானோர் தொகை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகின்றது..

இதையடுத்து, சமபவ இடத்திற்கு சென்ற பொலிஸார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள வைத்தியசாலை அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..