ஹட்டனில் அஞ்சல் ஊழியர்கள் நூதன ஆர்பாட்டம்

25 Jun, 2018 | 11:48 PM
image

 நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அஞ்சல் தினைக்கள ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்தைத் தொடா்ந்து ஹட்டன் அஞ்சல் தினைக்கள ஊழியர்களும் இன்று தேங்காய் உடைத்து நூதன எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுப்ட்டனர்

இலங்கை அஞ்சல் தினைக்கள உழியா்களின் பல்வேறு கோறிக்கைகளை முன்வைத்து  கடந்த 14 நாட்களாக நாடளாவிய ரீதியில்  முன்னெடுக்கபட்டு வரும் ஆர்பாட்டம் தொடர்ந்தும் இடம் பெற்றுவருகிறது இந் நிலையில் இன்று காலை 09 மணிக்கு ஹட்டன் பகுதியில் உள்ள அஞ்சல் ஊழியார்கள்  ஹட்டன் நகரில் தேங்காய் உடைத்து கறுப்பு பட்டி அணிந்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தின் போது ஹட்டன், பொகவந்தலாவ, மஸ்கெலியா, டிக்கோயா, வட்டவலை, கினிகத்தேன, நோர்வுட், தலவாகலை, நுவரெலியா, டயகம ஆகிய பகுதிகளில் உள்ள 500கும் மேற்பட்ட அஞ்சல் நிலைய ஊழியார்கள்  தேங்காய் உடைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 -07வேதனத்தை பொற்றுகொடுத்தல் போன்ற கோறிக்கைகலை இந்த நல்லாடச்சி அரசாங்கம் நிறைவேற்றபட வேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியர்கள் அவர்களது ஏழு கோறிக்கைகளை முன்வைத்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல்நிலைய ஊழியர்கள் ஹட்டன் பிரதான தாபால் நிலையத்தில் இருந்து ஹட்டன் பழைய தபால் நிலையம்வரை  பேரணியாக சென்றும் தமது அனைத்து கோறிக்கைகளும் நிறைவேற்றபட வேண்டுமென  ஹட்டன் பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக தேங்காய் உடைத்து கறுப்பு பட்டி அணிந்து  இந்த ஆர்பாட்டம்  முன்னெடுக்கபட்டமை  குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right