மாத்தறை கம்புறுப்பிடியவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துரே மதுஷின் உதவியாளர் கொல்லப்பட்டார்.

 

 விசேட அதிரடி படையினரின் துப்பாக்கி சூட்டில் பாதாள உலகக் குழுவின் தலைவரான மாகந்துரே மதுஷின் உதவியாளரான மனில் ரோகன என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மாத்தறை கம்புறுப்பிடிய பகுதியல் விசேட அதிரடி படையினருக்கும் மனில் ரோகனவிற்கும் இடையில் நிகழ்ந்த சண்டையிலேயே குறித்த நபர் கொல்லப்பட்டுள்ளார்.