மிக் விமானக் கொள்வனவு மோசடியில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க விரைவில் இலங்கைக்கு வரவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதயங்கவீரதுங்க இலங்கை திரும்பும்போது கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி சார்பான அமைப்பொன்று நீதிமன்றத்தின் உதவியை நாளை நாடவுள்ளது

உதயங்க கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரைவை பெறுவதற்கு குறிப்பிட்ட அமைப்பு தீர்மானித்துள்ளது.

உதயங்கவீரதுங்கவின் சார்பில் தமது அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகவுள்ளனர் என நலின் நிசங்க என்பவர் தெரிவித்துள்ளார்.

மிக்விமானக்கொள்வனவு மோசடி தொடர்பில் உதயங்கவிற்கு எதிராக இன்டர்போல் பிடியாணையை பிறப்பித்துள்ள நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.