இலங்கையை சேர்ந்த தாயையும் மகளையும் நாடு கடத்துவதற்கு தடை

Published By: Rajeeban

25 Jun, 2018 | 05:25 PM
image

இலங்கையை சேர்ந்த தாயையும் மூன்று வயது மகளையும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் நாடு கடத்துவதை  அந்நாட்டு நீதிமன்றமொன்று தடுத்து நிறுத்தியுள்ளது.

பிரியாவையும் அவரது மூன்று வயது மகளையும் நாடுகடத்துவதற்கான தடையை சமஸ்டி நீதிமன்ற நீதிபதி பேர்னார்ட் மேர்பி விதித்துள்ளார்.

பிரியா தன்னை நாடு கடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்த மனுநிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்படுவதை எதிர்பார்த்திருந்தார்.இந்நிலையிலேயே நீதிபதி இந்த தடையை விதித்துள்ளார்.

பிரியாவையும் அவரது கணவர் நடேசலிங்கத்தையும் இரு பிள்ளைகளையும் அதிகாரிகள் மெல்பேர்னில் உள்ள குடிவரவு தடுப்பு முகாமில் தடுத்துவைத்துள்ளனர்.

அவுஸ்திரேலியா அதிகாரிகள் தங்கள் புகலிடக்கோரிக்கையை நிராகரித்தமைக்கு எதிராக இந்த குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவை கடந்த வியாழக்கிழமை நீதிமன்றம்  நிராகரித்திருந்தது.

பிரியாவும் நடேசலிங்கமும் 2012 2013 ம் ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவிற்கு படகுகள் மூலம் சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதம் அதிகாலையில் இவர்களின் வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள் இவர்களை இழுத்துவந்து முகாமில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.

அதற்கு ஓரு வாரத்தின் பின்னர் பேர்த்திலிருந்து இலங்கை;கு அனுப்புவதற்காக அதிகாரிகள் இவர்களை விமானத்தில் ஏற்றியவேளை நீதிமன்றம் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியிருந்தது.

இவர்கள் கடந்த ஐந்து வருடங்களிற்கு மேலாக வசித்த பகுதியை சேர்ந்தமக்கள் பிரியா குடும்பத்திற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை பிரியாவை நாடு கடத்துவதை நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ள போதிலும் அவரது கணவரும் மகள் கோபிகாவும் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்குகின்றனர் என சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07