தேவையேற்பட்டால் அமெரிக்க குடியுரிமையை கைவிடுவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தேவையேற்பட்டால் இரண்டு மாதங்களிற்குள் குடியுரிமையை துறப்பதற்கான ஆற்றல் என்னிடம் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளுக்கு நேற்று வாக்குமூலம் வழங்கிய பின்னர் வெளியேறும்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டாடர். 

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதுவரை என்னை தேர்தலில் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளவில்லை எனினும் தேவையேற்பட்டால் நான் உதவுவேன் என கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆணையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்னும் வழங்கவில்லை. அவ்வாறான ஒரு ஆணை கிடைக்குமானால் அமெரிக்க பிரஜாவுரிமை ஒரு பொருட்டல்ல என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எனக்கு ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­மாறு மஹிந்த ராஜ­பக்ஷ இன்னும் ஆணை­யி­ட­வில்லை. அவ்வாறு அவர் ஆணையிட்டால் அது தொடர்பில் நடவடிக்கைகளில் இறங்குவேன். இந்த விடயத்தில் அமெரிக்க பிரஜாவுரிமை ஒரு பொருட்டல்ல. அதனை நீக்கிக் கொள்ள இரு மாதங்கள் போதும்.

எனவே அவ்­வா­றான கட்­டளை இன்னும் வராத நிலையில் அமெ­ரிக்க பிரஜா உரி­மையை நீக்­கி கொள்­வது தொடர்பில் எந்த நட­வ­டிக்­கை­யையும் முன்­னெ­டுக்­க­வில்லை.