கைவிடப்பட்டது வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் 

Published By: Digital Desk 4

25 Jun, 2018 | 03:21 PM
image

மன்னார் மாவட்டத்தின் வேலையற்ற பட்டதாரிகள் இன்று மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக 5 ஆவது நாளாக மேற்கொண்ட கவனயீர்ப்பு போராட்டத்தை இன்றுடன்  தற்காலிகமாக கைவிடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதங்களில் இடம்பெற்ற வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வுக்கு சென்ற பட்டதாரிளுக்கே இன்னமும் ஒழுங்கான பதில் நியமனங்கள்  வழங்கப்படாத நிலையில் அரசாங்கத்தினால் அடுத்தகட்ட வேலையற்ற பட்டதாரிகளுக்கான நேர்முக தேர்வுக்கான வர்த்தமானி அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு நடைபெற்ற நேர்முக தேர்வானது உரிய  முறையில் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்து,  பட்டதாரிகளுக்கான நியமனங்கள் புள்ளி அடிப்படையில் வழங்காது  பட்டத்தின் அடிப்படையிலும் பட்டம் பெற்ற ஆண்டின் அடிப்படையிலும் நியமனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கடந்த வாரம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கூடாரங்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த பாரளுமன்ற அமர்வில் வேலையில்லா பட்டதாரிகள் விடயம் தொடர்பாக வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலநாதன் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவருடைய கோரிக்கையின் அடிப்படையிலும் அதேபோன்று மன்னார்  மாவட்ட  சர்வமத அமைப்புக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் வேண்டுகோளினை ஏற்று குறிப்பிட்ட கவனயீர்ப்பு போரட்டத்தை இன்றுடன்  கைவிடுவதாகவும் தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டால் மீண்டும் எமது போராட்டத்தை தொடருவோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43