(நா.தினுஷா)  

இலங்கை - இந்தியா பெளத்த கலாசார பாரம்பரிய உறவினை வெளிகாட்டும் வகையிலான இலங்கை இராணுவ படையின் 80 வீரர்கள் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று புத்தகாயாவுக்கு சென்றுள்ளனர்.

இந்த விஜயத்திற்கான ஏற்பாட்டினை இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் ஏற்பாடு செய்திருந்தது.

 

இலங்கை இராணுவத்தினர் இந்த விஜயத்தின் போது புனித மகாபோதிக்கு செல்லவுள்ளனர். அத்துடன் புத்தகாயாவிலுள்ள உத்தியோகத்தர்கள் பயிற்சி கல்லூரிக்கான விஜயமென்றினையும் மேற்கொள்ளும் இவர்கள், இந்திய இராணுவத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.