முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம்

Published By: Priyatharshan

25 Jun, 2018 | 01:36 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் மருந்தகங்கள் மூடப்பட்டமை தொடர்பிலும் மருத்துவமனைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யக் கோரியும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை மாற்றம் செய்ய கோரியும்  இன்றைய தினம் மாவட்ட செயலகம் முன்பாக மக்கள் பாரிய ஆரப்பாட்டம் ஒன்றினை நடத்திவருகின்றனர்.

பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலக  அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று நடைபெற்றுவரும் நிலையில் இந்த போராட்டம் நடைபெற்று வருவதோடு பல்வேறு அரசியல் வாதிகளும் இவர்களை சந்தித்து கலந்துரையாடி மகஜர்களை பெற்று சென்றுள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  மக்களால் வணிக  கைத்தொழில் துறை அமைச்சரும், இணைத்தலைவருமான  ரிசாட் பதியுதீன், வன்னி  மாவட்ட மீள்குடியேற்ற பிரதியமைச்சரும், இணைத்தலைவருமான காதர் மஸ்தான், வடக்குமாகாண முதலமைச்சரும், இணைத்தலைவருமான முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இணைத்தலைவருமான சி.சிவமோகன் ஆகியோருக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது இதன் பிரதிகள் பிரதிகள்  அரசாங்கஅதிபர், மாவட்டசெயலகம், -முல்லைத்தீவு, சுகாதாரஅமைச்சர் - வடமாகாண சபை அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள்  வன்னி மாவட்டம் அனைத்து மாகாண சபை உறுப்பினர்கள் – முல்லைத்தீவுமாவட்டம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் வருமாறு,

முல்லைத்தீவு மாவட்ட சுகாதார செயற்பாட்டில் ஏற்படுத்திய சீர்கேடுகள் தொடர்பாக மேற்படிவிடயம் தொடர்பாக, 

முல்லைத்தீவு மாவட்ட பொதுமக்களாகிய நாம் தங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் சிறப்பாக செயற்பட்டுவரும் வடமாகாணசபையின் செயற்பாட்டால் முல்லை மாவட்ட மக்களாகிய நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துவரும் வேளையில் தற்போது எமது மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிவரும் வைத்தியக் கலாநிதி த.பூங்கோதை மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் செயற்பாடுகள் எங்களை ஆர்ப்பாட்டம் வரைக்கும் கொண்டுவந்துள்ளது.

01.    இறுதியுத்தம் காரணமாக எமது முல்லைத்தீவு மாவட்டம் பல விடயங்களில் பின்தங்கியுள்ளது. உலகம் அறிந்த உண்மை அத்துடன் எமது மாவட்ட உயிர் இழப்பு, தியாகங்களை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதியான சுகாதார அமைச்சர் திடீரென முல்லைத்தீவு மாவட்டத்தின் மருந்தகங்களை மட்டும் குறிவைத்து குறிப்பாக 04 மருந்தகங்களிற்கு மட்டும் கால அவகாசம் கொடுக்காமல் வழக்குதாக்கல் செய்தமையும் ஏனைய மருந்தகங்களிற்கு வழக்குதாக்கல் செய்யாமையும் வடமாகாணம் பூராகவும் மருந்தகங்களில் பதிவு பிரச்சினை உள்ள போது முல்லைத்தீவு மாவட்டத்தை மட்டும் இலக்கு வைத்தது ஏன் என்பதற்கான விளக்கம் எமக்கு இதுவரையும் புரியவில்லை.

02.    முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரத்தில் அமைந்துள்ள பிரதேச வைத்தியசாலையில் மக்களின் நலன்விரும்பிய வைத்தியக்கலாநி தி பு.கஜானா சேவைக் காலம் முடிந்து விட்டது என்று பதிலீடு இல்லாது இடமாற்றியமை முல்லைத்தீவு நகரையும் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் 98 வீத தமிழ்மக்களிற்கு தமிழ் சிறிதும் தெரியாத சிங்கள வைத்தியரினை நியமித்து அங்கு நோயாளியாகவரும் பொதுமக்களும்,கடமையாற்றும் ஊழியர்களும் படும்பாடுமிகவும் துன்பகரமாகவுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டபொதுமக்கள் தாங்கள் அனைவரையும்நேரில் சந்திக்கவுள்ளார்கள். அத்துடன் காலை 9.00 மணிமுதல் மதியம் 12.00 மணிவரையும் வைத்தியர் கடமையில் உள்ளார். பிற்பகல் 12.00 மணிக்குபின்னரும் சனி,ஞாயிறுமற்றும் விடுமுறைநாட்களிலும் செல்லும் நோயாளர்கள் வைத்தியம் பெற்றுக்கொள்ளமுடியாதநிலையும் அத்துடன் சுகயீனம் காரணமாகவிடுதியில் தங்கிருந்துவைத்தியம் பெறமுடியாதநிலைமையும் உள்ளது.இவ்விடயத்தைமக்கள் முறையிட்டபோதுவைத்தியசாலைசரியாகவே இயங்கிவருவதாகபிராந்தியசுகாதாரசேவைகள் பணிப்பாளரினால் பதிலளிக்கப்பட்டுள்ளது.

03.   மருந்தகஉரிமையாளர்கள்பலதடவைகள் தங்கள்மருந்தகங்களினைபதிவினைமேற்கொள்ளமுற்பட்டவேளைஅதற்குஉதவியும் ஆலோசனையும் வழங்காதவைத்தியக்கலாநிதி;த.பூங்கோதைமற்றும் அமைச்சர் வைத்தியசாலையில் வைத்தியர்களினால் எழுதும் மருந்துகளினைமுல்லைத்தீவுமாவட்டமக்கள் எங்கேசென்றுவாங்குவது?

04.    எமதுமாவட்டத்தில் பின்தங்கியநிலையில் காணப்படும் மூங்கிலாறுபிரதேசத்தில் பலமில்லியன் ரூபாபணம் வழங்கப்பட்டுமிகவும் அழகாககட்டப்பட்டுதிறக்கபட்டமூங்கிலாறுவைத்தியசாலைதற்போதுகாடுபோல் காட்சிதருவதுடன் அவ்வைத்தியசாலைக்கு இதுவரையும் நிரந்தரவைத்தியர் நியமிக்கப்படவில்லை.அங்குவாழ்ந்துவரும் பொதுமக்கள் வைத்தியக்கலாநிதித.பூங்கோதைஅவர்களினைசென்றுபலதடவைகள் கோரியபோதும் அவர்களிற்குஉண்மைக்குபுறம்பானகதைகளினை கூறியதுடன்  இதுவரையும் எந்தவிதமானநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

05.    எமதுமாவட்டத்தில் மிகவும் பின்தங்கியநிலையில் காணப்படும் ஜயங்கன்குளம் பிரதேசத்தில் வாழ்ந்துவரும் மக்களிற்காகஅங்கும் ஒருவைத்தியசாலைதிறக்கப்பட்டுஅதற்கும் நிரந்தரவைத்தியர் மற்றும் பாவிக்கமுடியாதநிலையில் ஒருநோயாளர் காவுவண்டியும் வழங்கப்பட்டநிலையில் அவ் மக்கள் பிரதேசசெயலகம் முல்லைத்தீவில் நடைபெற்றமாவட்டஅபிவிருத்திகுழுக்கூட்டத்தின் போதுஅங்குதற்களதுநிலைப்பாட்டினை கூறியும் இதுவரையும் எந்தவிதமானநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

06.    அளம்பில்,கொக்கிளாய் ஆகிய இரண்டுபிரதேசவைத்தியசாலைகளிற்கும் வைத்தியர்கள் கடமையில் இருந்தும் மக்கள் பயன்பெறமுடியாதநிலைகாரணம் வைத்தியர் கடமைநேரத்தில் கடமைக்குவராதுதனக்குவிருப்பமானநேரத்தில் கடமைக்குவருவதுடன் (ஒருநாளைக்குஆகக்குறைந்தது 01 மணித்;தியாலயம் கடமையாற்றுவதுமிகுதிநேரம் தனதுதனிப்பட்டவிடயங்களினைமேற்கொள்வது. மிகவும் அவசரத்தில் வரும் நோயாளர்களினை கூட பார்ப்பதில்லை) அவ்வைத்தியர் விடுமுறையில் சென்றால் அங்குவேறுவைத்தியர் கடமையில் இல்லாததுடன் விடுமுறையில் செல்லும் வைத்தியர் விடுமுறைமுடிந்துகடமைக்குதிரும்பியவுடன் தனதுநாளாந்தபதிவேட்டில் தான் முழுநாட்களும் கடமையில் நின்றுள்ளதாகதெரிவித்துஅதற்கானமுழுமையானகொடுப்பனவினையும் பெற்றுக்கொள்கின்றார். இதற்குவைத்தியக்கலாநிதித.பூங்கோதைஅவர்கள் சகலகொடுப்பனவினையும் எந்தவிமானகேள்விகளும் இல்லாதும் கழிப்பனவுகளும் இன்றிவழங்கிவருகின்றார்.

07.    புதுக்குடியிருப்புபிரதேசசெயலாளர் பிரிவின் கீழ் உள்ளவேணாவில் கிராமத்தில் 2009 ஆம் ஆண்டுக்குமுன்னர் கட்டப்பட்டுதற்போதுதிருத்தம் செய்துபாவிக்ககூடியநிலையில் உள்ளவேணாவில் ஆரம்பசுகாதாரநிலையக்கட்டடம் திருத்தம் செய்வதற்கானகோரிக்கையினைஅக்கிராமமக்களால் வைத்தியக்கலாநிதி;த.பூங்கோதைஅவர்களிடம் கோரிக்கைமேற்கொண்டபோதுஅவர் அதனைசிறிதும் பொருட்படுத்தாதன் காரணமாக அக் கிராமமக்கள் புதுக்குடியிருப்புபிரதேசசெயலாளருக்குதெரியப்படுத்திஅவர் அதற்கானதிருத்தச்செலவினைபெற்றுதிருத்தம் ஆரம்பிக்கப்படும் நிலையில் வைத்தியக்கலாநிதித.பூங்கோதைஅதனைதிருத்தம் செய்யாதுதடுத்துநிறுத்தியுள்ளதுடன் அதனைதிருத்தாதுபுதியகட்டடம் கட்டப்போவதாகவும் அதற்கானநிதிகள் தமக்குகிடைக்கப்பெற்றதாகவும் உண்மைக்குபுறம்பாக கூறிதற்போதுஅதனைமுழுமையாகதிருத்தாதுஅதன் காலப்பகுதியினைதிருத்தம் செய்துவருகின்றார். அவரிடம் அக்கிராமமக்கள் வினாவியபோது இவ்வளவும் காணும் எனஅதிகாரத்தொனியில் கூறியுள்ளார்.

08.    முல்லைத்தீவுமாவட்டபிராந்தியசுகாதாரசேவைகள் பணிப்பாளர் இலங்கைவைத்தியநிர்வாகசேவைகள் கற்கைநெறியினைபடிக்காதவைத்தியக்கலாநிதித.பூங்கோதையின் கீழ் இப்பட்டத்தைபெற்றவைத்தியர்கள் கடமையாற்றசட்டம் உள்ளதுஎன்றால் எமதுபின்தங்கியமாவட்டத்தில் காலஅவகாசம் வழங்காதுகுறிப்பாகவடக்குமாகாணசபையின் காலம் முடியும் போதுபிரச்சனைஏற்படுத்தியமைஅரசியல் நோக்கமா?

09.   வடக்குமாகாணமுதலமைச்சரேமுல்லைத்தீவுமாவட்டசுகாதாரசேவைகள்பணிப்பாளர் வெற்றிடம் உள்ளபோதும் வடக்குமாகாணசபைகாலம் முடியும் வரைவெற்றிடத்தினைவெளியிடாதுவைத்தநோக்கம் என்ன?

10.    முல்லைத்தீவுமாவட்டமருந்தகங்களினை 18.06.2018 ம் திகதியிடப்பட்டகடிதத்தில் உடனடியாகதங்கள் மருந்தகங்களினை மூடுமாறுவிடப்பட்டகட்டளையின் பிரகாரம் 20.06.2018 ம் திகதிமுல்லைத்தீவுமாவட்டத்தில் இயங்கிவந்தசகலமருந்தகங்களும் மூடப்பட்டுவிட்டன.அதன்பிற்பாடுஏன் என்னஅரசியல் நோக்கத்திற்காகநீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டது?

எனவேமேற்கூறப்பட்டவிடயங்களினைதங்கள் அனைவரினதும் மேலானகவனத்தில் எடுத்துகீழ்வரும் விடங்களினைநடைமுறைப்படுத்திஉதவுமாறுபொதுமக்களாகியநாம் மிகவும் மனவருத்தத்துடன் வேண்டிநிற்கின்றோம்.

01.    எந்தவிதமானதகுதிகளும் அற்றமுல்லைத்தீவுமாவட்டசுகாதாரசேவைகள் பணிப்பாளராகசெயற்பட்டுவரும்வைத்தியக்கலாநிதித.பூங்கோதைஅவர்கள்உடனேமாற்றப்படல்வேண்டும்.

02.    மருந்தகங்களிற்குஎதிராகமேற்கொள்ளப்பட்டநீதிமன்றவழக்குகள் உடன் நீக்கப்படல்வேண்டும்.

03.    மருந்தகங்களிற்குகாலஅவகாசம் வழங்கப்படுவதுடன் பின்தங்கியமுல்லைத்தீவுமாவட்டத்திற்குசிலஅனுகூலங்கள் வழங்கப்படல்வேண்டும்.அதேவேளை ஏனைய மாவட்டங்களிற்கும் இந்நடைமுறைகளினைபின்பற்றுவதுசாலச்சிறந்தது.

04.    முல்லைத்தீவுநகரத்தில் அமைந்துள்ளபிரதேசவைத்தியசாலைக்குஉடன் தமிழ் வைத்தியர் நியமிக்கப்படல்வேண்டும்.

05.    மூங்கிலாறுவைத்தியசாலைக்குஉடன் நிரந்தரவைத்தியர் நியமிக்கப்படல்வேண்டும்.

06.    ஜயன்கன்குளம் வைத்தியசாலைக்குஉடன் நிரந்தரவைத்தியர் நியமிக்கப்படல்வேண்டும் மற்றும் பாவிக்ககூடியநிலையில் உள்ளநோயாளர் காவுவண்டிவழங்கப்படல்வேண்டும்.

07.    அளம்பில்,கொக்கிளாய் ஆகிய இரண்டுபிரதேசவைத்தியசாலைகளின் வைத்தியர்களினைகடமைநேரத்தில் கடமையாற்றுதலைஉறுதிப்படுத்தல்வேண்டும். அத்துடன் அவர்கள் விடுமுறைபெறும் நாட்களில் மாற்றுவைத்தியர் அனுப்பிவைப்பதுடன் அவர்களினால் மேற்கொள்ளப்படும் தவறுகள் தண்டிக்கப்படல்வேண்டும்.

08.    புதுக்குடியிருப்புவேணாவில் கிராமத்தில் அமைக்கப்படும் ஆரம்பசுகாதாரநிலையம் முழுமையாகதிருத்தப்படுவதனைஉறுதிசெய்தல் வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55