பணமோசடி செய்தவர் தலைமறைவு:வவுனியாவில் சம்பவம்

Published By: Digital Desk 4

25 Jun, 2018 | 01:21 PM
image

வவுனியாவில் இயங்கிவரும் நுண்நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் சிதம்பரபுரம் பகுதியில் குழுவாக கடன் பெற்றுத்தருவதாக தெரிவித்து அப்பகுதி மக்கள் சிலரிடம் பணம் பெற்று தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கும்போது, 

கடந்த வாரம் சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 1 இல் குடும்பப் பெண்களுக்கு முன்பு நுண்நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றுக்கொடுத்த ஊழியர் ஒருவர் ஒரு குழுவினர் பெற்றுக்கொண்ட கடனைச் செலுத்தவில்லை என்று தெரிவித்து திரும்பவும் அவர்களுக்கு கடன் பெற்றுத்தருவதாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து ஊழியரின் வார்த்தையை நம்பி திரும்பவும் கடன் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர்களிடம் ஆயிரம் ரூபா வீதம் 20 பேரிடம் பணம் பெற்றுவிட்டு தற்போது அவரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும் குறித்த ஊழியர் ஏமாற்றிவிட்டு பணத்துடன் தலைமறைவாகிவிட்டதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிறுவனத்திற்குச் சென்று இவ்விடயம் தொடர்பாக முறையிடவுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56