(ரா.கலைச்செல்வன்)

மன்னார் மாவட்ட அஞ்சல் தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அஞ்சல் அலுவலகத்திற்கு முன் போராட்டம் இடம் பெற்றது.

அகில இலங்கை ரீதியாக அஞ்சல் அலுவலக பணியாளர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்ற தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மன்னார் மாவட்ட அஞ்சல் பணியாளர்கள் இன்று தொடர்ந்து  பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட அஞ்சல் அலுவலகத்திற்கு முன் காலை 10 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அணைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் கடமையாற்றுகின்ற நூற்றுக்கணக்கான பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் பல்வேறு வாசாகங்கள்  எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

தீர்வு பெற்றுத்தரும் வரை போரட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்று பணியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், அகில இலங்கை ரீதியாக அஞ்சல் அலுவலக பணியாளர்கள் முன்னெடுத்து வரும் தொழிற்சங்க போராட்டம் 14 நாட்களாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.