மேற்கிந்தியத்தீவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 36 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது.

அந்த வகையில் மேற்கிந்தியத்தீவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மேற்கிந்தியத்தீவுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது.

இந்த தொடரின் முதலாவது போட்டியில் மேற்கிந்தியத்தீவு  அணி வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான தொடரின் இரண்டாவது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

இதனால் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி  1-0 என்ற கணக்கில் முன்னிலையிலுள்ளது.

இந் நிலையில் கடந்த 23 ஆம் திகதி பிரிட்ஜ் டவுன், பார்படோஸில் பகலிரவு போட்டியாக ஆரம்பமான தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நாணயச் சுழற்­சியில் வெற்­றி­பெற்ற மேற்­கிந்­தியத் தீவு அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. 

அதன்­படி முதலில் கள­மி­றங்­கிய மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் தொடக்க ஆட்­டக்­கா­ரர்­க­ளாக பிராத்வைட், டேவன் ஸ்மித் ஆகியோர் 

இலங்கை அணி­யி­னரின் துல்­லி­ய­மான பந்துவீச்சை சமா­ளிக்க முடி­யாமல் இரு­வரும் விரைவில் ஆட்­ட­மி­ழந்து பெவி­லியன் திரும்­பினர்.

பிராத்வைட் 2 ஓட்­டங்­க­ளு­டனும் ஸ்மித் 2 ஓட்­டங்­க­ளு­டனும் பாவெல் 4 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழந்­தனர். இதனால் மேற்­கிந்­தியத் தீவுகள் அணி 8 ஓட்­டங்­க­ளுக்கு 3 விக்­கெட்­டு­களை இழந்து தத்­த­ளித்­தது.

இத­னை­ய­டுத்து கள­மி­றங்­கிய ஹோப் 11 ஓட்­டங்­க­ளு­டனும் ரோஸ்­டன்சேஸ் 14 ஓட்­டங்­க­ளு­டனும் ஆட்­ட­மி­ழந்­தனர். இதன்போது அணியின் ஓட்ட எண்­ணிக்கை 5 விக்­கெட்­டுக்கு 53 ஓட்­டங்கள் என இருந்­தது.

அதன்­பி­றகு மெதுமெது­வாக ஓட்­டங்­களைச் சேர்க்க 33.3 ஓவர்­களில் 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 88 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­த­போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் இடையில் நிறுத்­தப்­பட்­டது. 

ஷேன் டாவ்ரிச் 36 ஓட்­டங்­க­ளு­டனும் ஜேசன் ஹோல்டர் 16 ஓட்­டங்­க­ளு­டனும் களத்தில் இருந்தனர். தொடர்ந்து போட்டி ஆரம்பமாக இவ்விருவரும் நிதானமாக ஆடி ஓட்ட எண்ணிக்கையை 132 ஆக உயர்த்தப்பட முதலாம் நாள் நேரம் நிறைவுக்கு வந்தது.

இந் நிலையில் 132 ஓட்டங்களுடன் தனது இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய மேற்கிந்தியதீவு அணியின் ஷேன் டாவ்ரிச் 71 ஓடடங்களுடனும் ஜேசன் ‍ஹோல்டர் 74 ஓட்டங்களையும் பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தனர். இறுதியில் மேற்கிந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 69.3 ஓவர்களில் 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.   

இலங்கை அணி சார்பில் லஹிரு குமரா 4 விக்கெட்டுக்களையும் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுக்களையும் சுரங்கா லக்மல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். 

இதனையடுத்து இரண்டாம் நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது இலங்கைய அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களான குசல் பெரேரா மற்றும் மஹேல உடவத்த ஆகியோர் ஏமாற்றத்தை அளித்தனர். 

குசல் பெரேரா ஓட்டம் எதுவும் பெறாது டக்கவுட் ஆனார். மஹலே உடவத்த 04 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து தனுஷ்க குணதிலக்க சற்று நிதானமாக துடுப்பெடுத்தாடி 73 பந்துகளில் 29 ஓட்டங்களையும் குசல் மெண்டீஸ் 22 ஓட்டங்களையும்  தனஞ்சய டிசில்வா 8 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்து வெளியேறினர். 

இதனையடுத்து களம் புகுந்த ரோஷானா சில்வா 3 ஒட்டங்களுடனும் நிரோசன் டிக்வெல்ல 13 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இறுதியில் இரண்டாம் நாளான ஆட்ட நேர முடிவின் போது இலங்கை அணி மேற்கிந்தியதீவு அணியின் பந்துகளுக்கு முகங்கொடுக்க முடியாது தடுமாற்றத்துடன் 36 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது.

மேற்கிந்திய அணியின் சார்பில் கேமர் ரோச், சனோன் கேப்ரியல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ஜோசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.