நைஜீரியா நாட்டின் மத்திய பகுதியில்  இருகுழுக்களுக்கு  இடையில் ஏற்பட்ட கலவரத்தில் 86 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

நைஜீரியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிளாட்டோ மாகாணத்தின் பரிகின் லாடி பகுதியில் இரு இனக் குழுக்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற மோதலில், இரு பிரிவினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.

இதன்போது ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி 86 பேர் பலியாகியுள்ளதோடு, மேலும் பலர் காயமடைந்துள்ளனர். அத்தோடு 50 க்கும் மேற்பட்ட வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு இனக் குழுக்களுக்கு இடையில் பல வருடங்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றது. இதேபோன்று கடந்த 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மோதலில் ஆயிரக்கணக்கானோர் பலியாகிமை குறிப்பிடத்தக்கது.