முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ பாரிய நிதி மோசடி பிரிவில் ஆஜர் ஆகியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் இரண்டரை மணிநேரம் வாக்குமூலம் பதியப்பட்டபின் அவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவிலிருந்து வெளியேறிச் சென்றார்.

டீ.ஏ.ராஜபக்ஷவின் நினைவுத் தூபி அமைத்தலின் போது பொதுமக்கள் நிதியை சட்டத்திற்கு புறம்பான வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிக்கவே அவர் இன்று காலை 9 மணியளவில் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்தார்.  

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் போது, டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு பொது மக்களின் 8.3 மில்லியன் ரூபா பணத்தைப் பயன்படுத்தியதாக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.  

இக்குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலமளிக்க பல முறை அவர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் வாக்குமூலம் வழங்குவதற்காக வருகை தருவதாக தெரிவித்திருந்தார்.

இதன்படி அவர் இன்று காலை 9 மணியளவில் நிதி மாேசடி விசாரணை பிரிவில் ஆஜராகியிருந்தா நிலையில் அவரிடம் 11.30 மணி வரையில் சுமார் இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.