இரத்மலானை சக்கிந்தராமவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள இராணுவ வீரரின் வீட்டுக்கு அருகில் இன்று காலை 7.30 மணியளவில் மேற்படி தூப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. 

முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாதோரால் இந்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் காயமடைந்த இராணுவ அதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.